கஹவத்தையில் தமிழர்கள்மீது தாக்குதல்! சொத்துகளுக்குதம் சேதம்!!

கஹவத்தை, வட்டாபத்தை தோட்டத்தில் நேற்றிரவு தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதனால் காயமடைந்த நால்வர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்றே தோட்டத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது எனவும், சொத்துகளுக்கு சேதம் இழைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டாபத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர், ‘ஆட்டோ கெரேச்’ ஒன்றை நடத்திவந்துள்ளார். அங்கு மற்றுமொரு தமிழ் இளைஞரும் பணிபுரிந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்றிரவு உணவு வாங்குவதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரை வழிமறிந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் இரவு 9 மணியளவில் தோட்டத்துக்கு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆட்டோ கெரேஞ் உரிமையாளரையும், அங்கு வேலை செய்தவரையும் அப்பகுதியில் இருந்த ஏனைய சிலரையும் தாக்கியுள்ளனர்.

4 ஆட்டோக்கள், பைக்குகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இதனால் வட்டாபத்தை பகுதியில் நேற்றிரவு கடும் பதற்றம் நிலவியது. இரவு பொலிஸாரும் வந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles