காணாமல்போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை (25.06.2022) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் காணாமல் போன நிலையில் நேற்றுமுன்தினம் (27.06.2022) மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles