கண்டி, தலாத்துஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, கட்டுகித்துல பகுதியிலுள்ள ஓடையொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த இளைஞனே, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
27 வயது இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை தலாத்துஒயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.