தேர்தல் தினத்தில் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மொட்டு சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட்டு தங்களது பெறுமதிமிக்க வாக்கை பயன்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குருநாகல் மாவத்தகம பிரசேத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவருக்கு ஒத்துழைப்பை வழங்கக்கூடிய பாராளுமன்றமும் அமைச்சரவையும் தேவைப்படுகிறது.
நாடளாவிய ரீதியிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம், பாடசாலைகளை நிறுவுதல், வைத்தியசாலைகளை நிறுவுதல் மற்றும் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதியினால் இதுவரையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பாராளுமன்றமொன்று அவசியம். இது தொடர்பில் கவனம் செலுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தேர்தல் தினத்தில் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மொட்டு சின்னத்தின் எதிரே புள்ளடியிட்டு தமது பெறுமதிமிக்க வாக்குகளை பயன்படுத்துமாறு பிரதமர் இதன்போது கேட்டுக் கொண்டார்.