குட்டி தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை!

உள்ளாட்சிசபைத் தேர்தல் இயலுமானவரை கூடியவிரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில், ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா கூறியவை வருமாறு,

” உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் எமது தரப்பு கருத்துகள், தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டன. கடந்த காலங்களில் வேண்டுமென்றே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிதாக வேட்புமனு கோரும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மக்கள் மத்திக்கு செல்வதற்கு அஞ்சும் எதிரணிகள், சிற்சில காரணங்களைக்கூறி தேர்தலை பிற்போடுவதற்கு முற்படுகின்றனர். தோல்வி பயத்தாலேயே இப்படியான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

உள்ளாட்சித்தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, தேர்தல் ஆணைக்குழுவுக்கு இயலுமானவரை விரைவில் தேர்தலை நடத்துமாறு நாம் கோரினோம். மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோரினோம்.

விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை தேர்தல் ஆணைக்குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.

பொதுத்தேர்தலை நாம் எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக நடத்தினோம். எனவே, நீதியான முறையில் அமைதியான தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை நாம் ஏற்படுத்துவோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles