குயில்வத்தையில் மதுபானசாலை அமைய இடமளியோம் – ம.ம.மு. போராட்டத்தில் குதிப்பு!

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

ஹட்டன், குயில்வத்தை பகுதியில் அமைக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையக மக்கள் முன்னணி இன்று குயில்வத்தையில் போராட்டத்தில் ஈடுபட்டது.

மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஸ்ணன் ஆலோசனைக்கமைய அக்கட்சியினர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவியும் ,முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

” இப்பகுதி பாடசாலை, ஆலயம் மற்றும் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் மதுபானசாலையை அமைத்தால் முழு பகுதியும் வீணாகிவிடும். எனவே இப்பகுதியில் மதுபானசாலையை முன்னெடுக்க விடமாட்டோம். இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவி சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles