குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிக்கும் விசேட திட்டம் ஆரம்பம்

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அந்த குடும்பங்களில் ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறான குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிப்பதற்கு விவசாய அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரன்ன, வடிகல பிரதேசத்தில் நேற்று இந்த வேலைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதுடன் ஒரு குடும்பத்திற்கு மூன்று ஆடுகள் என்ற ரீதியில் பகிர்ந்த ளிக்கப்பட்டன. ஒரு கிராமத்திற்கு 10 குடும்பங்கள் என்ற ரீதியில் இந்த ஆடுகள் பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles