குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கும் ரஷ்யா

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பமும் உறுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தால் மூன்று நாட்களில் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால தேசிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நிறக் கட்சிகளை ஒதுக்கி வைத்து மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles