குளவிக்கொட்டால் மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில் வேலை செய்யும் மூவரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், இருவர் வீடு திரும்பினர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் – செ.தி. பெருமாள்










