குளவிக் கொட்டு: 4 மாணவிகள் டயகம வைத்தியசாலையில் அனுமதி

டயகம – அக்கரப்பத்தனை இன்று காலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நான்கு மாணவிகள் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் காட்டுப் பாதையூடாக பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது, அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மாணவிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரு மாணவிகள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய இரு மாணவிகளும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கௌசல்யா

Related Articles

Latest Articles