கூட்டத்தில் பங்கேற்றார் திலகர்! விழிபிதுங்கி நிற்கும் திகா அணி!!

தேர்தல்  ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (25) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.திலகராஜும் பங்கேற்றிருந்தார்.
 
தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரத்துக்கும், பொதுச்செயலாளர் திலகருக்குமிடையில் அரசியல் ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி செயற்பாடுகளில் திலகர் பங்கேற்பதில்லை.
எனினும், தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு சென்றுள்ளார்.  அது தொடர்பான படங்களை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். எந்த கட்சியின் சார்பில் பங்கேற்றீர்கள் என எழுப்பட்ட கேள்விக்கு ‘புன்னகை’ அடையாளத்தை மட்டுமே திலகர் பதிலாக வழங்கியுள்ளார்.
அதேவேளை,தொழிலாளர் தேசிய முன்னணியின் யாப்பை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் திலகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல் திகா அணி திண்டாடுகின்றது. மயில் சின்னம் மாயமானதுபோல் அரிவாளும் காணாமல்போய்விடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
 
 
 
 

Related Articles

Latest Articles