கேகாலை மாவட்டத்தில் 23 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கேகாலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் ஊழியர்கள் மூவர் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த மருத்துவர் குமார விக்ரமசிங்க,
”கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் மூன்று மருத்துவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மருத்துவரின் கணவர், கொவிட் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பின்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவரது மகனும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவரின் இளைய மகள் மற்றும் ஊழியர் ஒருவரும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்பத்தப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.” என்று மேலும் தெரிவித்தார்.