கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட திம்புள்ள, போகாவத்தை, ஸ்டோனிகிளிப் ஆகிய பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகு இன்று ஏற்றப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவருமான இராஜமணி பிரசாதின் பரிந்துரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
