கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 14 விருப்பு வாக்குகளால் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தவிசாளர் ராஜமணி பிரசாந் சமர்பித்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சபைக்கு சமூகமளித்த 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்த எஸ்.ராஜா எதிர்த்து வாக்களித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாந் உட்பட உப தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆர்.கெசியோன்ராஜ், எஸ்.விஜயகுமார், பி.நேசன், ஐ.பாலசுப்ரமணியம், சந்திரவதனி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியை சேர்ந்த என்.கருணரத்ன ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
