கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்! அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

கல்வியை விற்பணை செய்வதற்காக கொண்டு வந்துள்ள இராணுவ நிர்வாகத்தை நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காகாக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாக சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என கோரிக்கை விடுத்து அட்டன் நகரில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை (05.08.2021) காலை நடத்தினர்.

அட்டன் புட்சிட்டிக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தி அதை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கொண்டு பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.

இந்த பேரணி புட்சிட்டி அருகில் ஆரம்பமாகி அட்டன் நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஒன்றிணைந்தது.

அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை வெளிக்கொனர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

Related Articles

Latest Articles