கொத்மலை பிரதேச சபை உப தவிசாளர் பதவி இதொகா வசம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் கொத்மலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று(25) கொத்மலை பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முரமுதலி கெதர அஜித் குமார முரமுதலி 30 வாக்குகளைப் பெற்று தவிசாளரானார்.

மேலும் கொத்மலை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் சுப்பிரமணியம் சன்முகதாசன்   நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைக்குமான நுவரெலியா மாவட்டத்தின் ஆறு உள்ளூராட்சி மன்றங்களில் இ.தொ.கா மூன்றிலும், தே.ம.ச மூன்றிலும் இனைந்து ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Latest Articles