கொரோனா வைரஸ் தொற்றால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர்களின் 5 வயது மகள் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22 ஆம் திகயும், 27 வயதுடைய தாய் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
(மக்களே அவதானம், கொரோனாவால் ஒரு நொடியில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறலாம். எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள். உங்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதையும், உங்களில் இருந்து பிறருக்கு தொற்றாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள்.)










