கொரோனாவால் பதுளையில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு!

பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் 22-04-2021 அன்று இரவு உயிரிழந்த பெண் ஒருவருடன், மொத்த மரணங்கள் 16ஆக அதிகரித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 77 வயதுடைய பெண்ணொருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இம் மரணத்தை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மரணமானவரின் உறவினர்கள் தகனம் செய்ய விரும்பாதலால், அவரின் ஜனாசா மட்டக்களப்பு பகுதிக்கு இன்று 23-04-2021ல் எடுத்துச்செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்படவுள்ளது.

இத்தகவலை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய ஊடகத்திற்கு தெரிவித்தார்.

தியத்தலாவையில் 05 மரணங்கள், பண்டாரவளையில் 04 மரணங்கள், பதுளையில் 03 மரணங்கள், வெலிமடையில் 04 மரணங்கள் என்ற வகையில் பதுளை மாவட்டத்தில் 16 பேர் கோவிட் 19 தொற்றினால் மரணமாகியுள்ளனரென்று பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மரணமானவர்களில் ஏழு பேர் பெண்களாவர். ஒன்பது பேர் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேற்படி மருத்துவமனையில் நோயாளர்கள் 12 பேருக்கு ‘என்டிஜன்’ பரிசோதனை 23-04-2021ல் மேற்கொள்ளப்பட்ட போது, அவர்களில் 09 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானமை தெரிய வந்துள்ளது. இவர்களில் அப்புத்தளைப் பகுதியின் தங்கமலை தோட்டத்தின் தாயும் மகனும் அடங்கியுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Paid Ad
Previous articleமத்திய மாகாணத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று!
Next article‘கொழும்பு மாவட்டத்தில் 32,744 பேர் கொரோனாவால் பாதிப்பு’