கொரோனாவால் மூன்றரை வயது சிறுமி பலி – பலாங்கொடையில் சோகம்

பலாங்கொடை –  மாரதென்ன தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.

விக்னேஸ்வரன் சாதுஷா  என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார காரியாலய அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர்.

Related Articles

Latest Articles