வீரியம்மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் மொயின் அலி, இன்று குணமடைந்துள்ளார்.
இரு தடவைகள் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவரின் உடலில் தற்போது வைரஸ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொயின் அலி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
இலங்கைக்கு கடந்த 3 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மொயின் அலிக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது இங்கிலாந்தில் பரவிய புதிய வகையான கொரோனா என்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.