கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான அனைத்து கடற்படையினரும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ராஜாங்கனை நோயாளியுடன் தொடர்புடையவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.