மஸ்கெலியா, புரவுன்லோ தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (07.12.2020) காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரையான காலப்பகுதியில் மகா யாகம் வளர்க்கப்பட்டது.
மேற்படி தோட்டத்திலும் அதனை அண்மித்த பகுதியான கங்குவத்தை பிரிவிலும் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகினர். அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அப்பகுதிகளில் வைரஸ் பரவல் தாக்கல் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையிலேயே தோட்ட ஆலய பரிபாலன சபையினரும், தோட்ட இந்து இளைஞர் மன்றத்தினரும் இணைந்து இந்த யாகத்தை நடத்தினர். சர்வமத தலைவர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
நாடும், நாட்டு மக்களும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீளவேண்டும் எனவும் யாசத்தின்போது இறைவனிடம் வேண்டப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்












