‘கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’

இந்தியாவின் நிலைமை இங்கு ஏற்படாமல் இருக்க, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கவேண்டிய அனைத்துவிதான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் முன்னெடுத்தும் வருகின்றது – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) இலங்கை தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பிலும்,தற்போதைய நிலைமை நீடித்தால் இந்தியாவின் அவலம் இங்கும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதல்லவா எனவும் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ செப்டம்பர் மாதமளவில் என்ன நடக்கும் என்பதைவிடவும், தற்போதைய வைரஸ் பரவலைக்பட்டுப்படுத்தி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்கே அரசு முயற்சிக்கின்றது. அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அரசு செய்துள்ளது. தொடர்ந்தும் செய்துவருகின்றது.

மேற்படி ஆய்வு நிறுவனத்தின் வெளியீடு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. மரண எண்ணிக்கை எவ்வாறு 20 ஆயிரம்வரை உயரும் என விஞ்ஞான ரீதியிலான தர்க்கம் கோரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது அனுபவமின்றியே நாம் சவாலை எதிர்கொண்டோம். தற்போது அனுபவம் உள்ளது. எனவே, அரசு என்ற வகையில் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles