கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (20) மேலும் 198 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
117 ஆண்களும், 81 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
