‘கொலை செய்யப்பட்ட எம்.பியின் மோதிரத்தை களவாடிய மூவர் கைது’

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நிட்டம்புவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நிட்டம்புவ மற்றும் ரன்பொகுணகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அணிந்திருந்த 02 தங்க மோதிரங்கள் மீட்கப்பட்டமை மற்றும் மெகஹகிவுல உள்ளூராட்சி சபைத் தலைவரின் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட போது அணிந்திருந்த மற்றுமொரு தங்க மோதிரத்தை அகற்றியமைக்காக மற்றைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீட்கப்பட்ட 03 தங்க மோதிரங்கள் அடகு கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles