கொழும்பில் 14 மணித்தியால நீர்வெட்டு!

எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11,12,13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

Related Articles

Latest Articles