லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப்பெற்றது.
Bell-Drummond 53 பந்துகளில் 70 ஓட்டங்களையும், உதான 19 ஓட்டங்களையும், சந்திமால் 14 ஓட்டங்களையும் பெற்றனர். சந்தகன் 3 விக்கெட்டுகளையும், லக்ஷான், துஷார ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 151 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து ,இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
அவ்வணி சார்பாக ராஜபக்ச 33 ஓட்டங்களையும், லக்ஷான் 31 ஓட்டங்களையும், ஜயசூரிய 22 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகனாக லக்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
எல்.பி.எல். தொடரில் ஆரம்பம் முதலே கொழும்பு கிங்ஸ் சிறப்பாக செயற்பட்டது, தொடர் வெற்றிகளையும் குவித்தது. காலி அணி தடுமாற்றங்களுக்கு மத்தியிலேயே அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகியது. இந்நிலையில் ஏமாற்றமளிக்கும் வகையில் கொழும்பு அணியின் வெறியேற்றம் அமைந்துள்ளது.