கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவில் 4,820 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது!

பதுளை, கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவ்வாறு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் ,பண்டாரவளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 3அடி உயரமான 4 ஆயிரத்து 820
கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 43 வயதுடைய உடகம எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles