கோபா குழுவின் தலைமைப்பதவியும் ஆளுங்கட்சிவசமானது!

அரச கணக்கு குழுவின் (கோபா) தலைவராக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

9ஆவது பாராளுமன்றத்தின் கோபா குழுவின் முதலாவது கூட்டம் இன்று (23) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போதே கோபா குழுவின் தலைவர் பதவிக்கு திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்னாள் தலைவர் லசந்த அழகியவன்ன முன்மொழிந்தார். அதனை அமைச்சர் உதய கம்மன்பில வழிமொழிந்தார்.

கோப் மற்றும் கோபா ஆகிய முக்கிய இரு குழுக்களினதும் தலைமைப்பதவி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Paid Ad