நாடாளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப்பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக பண்புகளை இந்த அரசாங்கம் மதிக்கின்றதெனில், நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிகளுக்கு வழங்கப்படுவதே சிறப்பாக அமையும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிரணிகள் கூட்டாக மனுவொன்றை கையளிக்க திட்டமிட்டுள்ளன.