பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்தோ அல்லது
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தோ கட்சிக்குள் எந்தக்கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
சரத் பொன்சேகா ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாள ராக விண்ணப்பிக்கவில்லை ,கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் எனச் செயற்குழு தீர்மானித்துள்ளது, அந்தத் தீர்மானத்தில் மாற்றம்
இல்லை.
கட்சியின் உயர்மட்ட குழுவொன்று பொன்சேகாவை சந்தித்து பேச்சு நடத்தியது. எனவே, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
