ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பதற்கு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைவோம் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறினார்.