சஜித் அணியில் டலசுக்கு முக்கிய பதவி

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் டலஸ் நேரடியாக இணையும் பட்சத்தில் அவருக்கு மாத்தறை மாவட்ட இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமைபெறும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மற்றும் மாவட்ட இணை அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles