முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.