சபாநாயகர் பதவியை ஏற்க தயார் – மஹிந்த யாப்பா அறிவிப்பு

” பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தனக்கு வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அடுத்த சபாநாயகர் நீங்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பு அவசியாமாக உள்ளது. அதனை இயற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அது நிறைவேற்றப்படவேண்டும். அதற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மஹிந்த யாப்பா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles