சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெபினார் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆலோசனை வழங்கும் எயார்டெல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து எயார்டெல் லங்கா அண்மையில் தொழில்முறை வெற்றியை அடைவதற்காக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக ஒரு தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது முகாமைத்துவ பீடத்தின் 250 மாணவர்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனை மற்றும் பயிற்சியை வழங்கியது.

தொடர்ச்சியான வெபினார் கருத்தரங்குகள் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இளங்கலை பட்டதாரிகளுக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து தங்களது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாகவும் இது அமைந்தது. இந்த தொடர் கருத்தரங்குகள் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதும் இடம்பெற்றது.

மேலும், மாணவர்களின் கல்வி செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 மாணவ, மாணவிகள் அடங்கிய குழுவொன்று இந்த சிறப்பு ஆலோசனை திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா, ‘தனியார் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றத்தை பெற்றுக் கொள்வதற்காக அதிகரித்துவரும் மனரீதியான அழுத்தம் காரணமாக உயர்கல்வியை மேற்கொள்ளும் அதேநேரம் பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் பெரும்பாலானோர் நிறுவன ரீதியான ஆலோசனைகளுக்கு தமது கவனத்தை செலுத்த முயற்சிகளை எடுக்கின்றனர்.

கல்வித் தகைமையில் காணப்படும் பொதுவான இயல்பு மற்றும் குறைந்த தொழில் ரீதியான தகைமைகள் காணப்படுவதனால் இந்த தேவை மேலும் அதிகரித்துள்ளது. கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வது போலவே தொழில் ரீதியான வெற்றியை அடைய சிறந்த ஆலோசனை ஒட்டுமொத்தமாக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இவ்விதமான வேலைத்திட்டங்களுக்காக நாம் ஒத்துழைப்புக்களை வழங்கியது இதன் காரணமாகவே ஆகும்.’ என தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், சான்றளிக்கப்பட்ட சிரேஷ்ட பயிற்சியாளரால் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி பட்டறை மூலம் எயார்டெல் லங்காவின் அனுபவமிக்க ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர், மேலும் அங்கீகரிக்கப்பட்ட பெரு நிறுவன தலைவர்களால் தொடர்ச்சியான வெபினார் தொழில்நுட்பத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

USAID இன் நிதியுதவியுடன் இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் ’21FOR21′ போன்ற தொழில்முனைவோர் திட்டமான லுழரடுநயன செயற்திட்டங்களுடன் கூட்டிணைந்து, எயார்டெல், இளைஞர் தொடர்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இலங்கையின் இளைஞர்களுக்கு அவர்களின் திறனை வெளிப்படுத்த தேவையான வாய்ப்புகள் மற்றும் தகவல்களை அணுகுவதை உறுதி செய்வதில் எயார்டெல் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleஇஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை
Next articleசுய தொழிலை ஊக்குவிக்க விசேட திட்டம் : ஜீவன் தொண்டமான்