சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அதே பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்களை கைது செய்துள்ளதாக சமனலவெவ காவற்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 9 ஆம் திகதி இரவு வெளியில் இருந்து உணவை எடுத்து வந்து பல்கலைக்கழக சிற்றுண்டி சாலையில் இரவு உணவு உட்கொண்டு இருந்த சந்தர்ப்பத்திலேயே வேறு சில மாணவர்கள் மின்சாரத்தை துண்டித்து இந்த தாக்குதலை நடத்தி தலைமறைவாகி இருந்து நிலையிலேயே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியும் தொடர்ந்து பலாங்கொடை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி