சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எழுவர் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் நாளை 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையில் படுத்தியபோது அவர்களை எதிர் வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை அதே பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles