சம்மாந்துறை இளைஞர் போராட்டம் தொடர்கிறது

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த திங்கட்கழமை குறத்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற அமீர் அப்னான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.ஏ. மஜீத், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

– ஊடக பிரிவு-

Related Articles

Latest Articles