மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சி செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றாராம்.
இந்நிலையலேயே ஐ.தே.கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் ஐ.தே.கவில் இணையவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.










