சர்வக்கட்சி அரசால் சஜித் அணி பிளவுபடும் சாத்தியம்!

சர்வக்கட்சி அரசில் இணைவது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் 18 எம்.பி.க்கள், அரசுடன் இணைய தீர்மானித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்க ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசில் இணையக்கூடாது என சஜித் அணிக்குள் ஒரு குழு தீவிரமாக வலியுறுத்திவரும் நிலையிலேயே மற்றுமொரு குழு, கட்சி மாறுவது பற்றி பரீசிலித்து வருகின்றது.

இதனால் கட்சிக்குள் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முடிவொன்றை எடுப்பதில் கட்சி தலைமை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட முக்கியமான நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles