சர்வதேச பகவத்கீதை மகோற்சவம் இம்முறை இலங்கையில்!

சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இம்முறை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறித்த மகோற்சவம் மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரை கொழும்பு தாமரைத் தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத்கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வணக்கத்திற்குரிய மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்;தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும்.

அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரணையுடன் 2024.03.01 தொடக்கம் 2024.03.03 வரை தாமரைத் தடாக வளாகத்தில் நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சரா விவகார அமைச்சர்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles