சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் இன்று (16.06.2022) ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது. 300ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். பின்னர் அட்டன் தொழில் திணைக்களத்திற்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு தொழில் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

வீட்டுப்பணியும் ஒரு தொழில் தான். எனவே வீட்டுப் பணியாளரையும் தொழிலாளியாக கருது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு உரிமையாளர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலைகள் தொடச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்களுக்குரிய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வரிசை யுகத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தியமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles