மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை.
வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் வெளியாகிய இத் திரைப்படம் 10 நாட்களில் 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
மாரி செல்வராஜின் வெற்றிப் படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் வரிசையில் தற்போது வாழையும் இணைந்துகொண்டது.