சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட அத்துருகிரிய படுகொலை: வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்

அத்துருகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளப் வசந்த என்பவரை கொலை செய்வதற்காகவே வகுக்கப்பட்ட திட்டம் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துருகிரிய பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
கிளப் வசந்த என்பவரும், பாடகி சுஜிவாவின் கணவருமே உயிரிழந்துள்ளனர்.

அத்துருகிரிய பகுதியில் பச்சை குத்தும் நிலையமொன்றுக்குள்ளேயே இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்தை திறந்து வைப்பதற்காகவே கிளப் வசந்த மற்றும் அவரது மனைவியும் வந்துள்ளனர். பிரபல பாடகி கே. சுஜிவாவும் பங்கேற்றிருந்தார். மேலும் சிலரும் வருகை தந்திருந்தனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் கடும் கவலையில் காணப்பட்டு, கண்ணீர் சிந்தி அழுதார். ஆனால் அவர்தான் இச்சம்பவத்தை அரங்கேற்ற ஒப்பந்தக்காரராக பயன்படுத்தப்பட்டுள்ளார். பொலிஸாரிடம் அவர் இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸார் 10 பொலிஸ் குழுக்களை களமிறக்கினர்.

இந்நிலையில் பச்சைக்குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது கிளப் வசந்தவை கொல்வதற்கான திட்டத்தை நிறைவேற்றவே குறித்த வர்த்தக நிலையத்தை ஆரம்பித்தாகவும், அவருடன் சமூக வளைத்தலம் ஊடாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாகவும் பச்சைக் குத்தும் நிலையத்தின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இக்கொலைக்கான திட்டமிடலுக்காக டுபாயில் இருந்து தனக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பிரகாரமே குறித்த பயணம் வழங்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டவர்கள் டுபாயில் கைது செய்யப்படுவதற்குரிய உளவு தகவலை கிளப் வசந்தவே பாதுகாப்பு தரப்புக்கு வழங்கினார் என்ற சந்தேகம் கஞ்சிபானி இம்ரான் தரப்புக்கு இருந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles