சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது! சாமிமலை பகுதியில் கொடூர சம்பவம்

4 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கிய குற்றச்சாட்டின்கீழ் அவரின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டப் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப வறுமை காரணமாக சிறுமியின் தாய் 18 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்கு சென்றுள்ளார்.

தாய் உலப்பனை பகுதியைச் சேர்ந்தவர், வெளிநாடு செல்வதால் தனது 9 வயது மகனையும் மற்றும் 4 வயது மகளையும ஓல்ட்டன் தோட்டத்தில் உள்ள தனது தாயிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் தமது வீட்டுக்கு வரும் மாமா தங்கைக்கு மது பருக்கியுள்ளார் என 9 வயது சிறுவன் உலப்பனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரை யின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles