14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது மகளுக்கு அளவுக்கதிகமாக கோபம் வருவதாகவும், வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை பிள்ளை கேட்பதில்லை என்பது உட்பட பல காரணங்களினால் தெய்வ குற்றமாக இருக்கலாம் என எண்ணி பிள்ளைக்கு தாயத்து போடுவதற்காக பூசாரி ஒருவரை பெற்றோர் அணுகியுள்ளனர்.
இதன்போது கடந்த 6 ஆம் மாதம் 3 ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி, பிள்ளைக்கு தாயத்து போட வேண்டும் என கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது. பின்னர் சுகயீனமுற்ற சிறுமியை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது சிறுமி கருதரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர் 7 ம் மாதம் 11 ம் திகதி லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 30 வயதுடைய , நமுனுகுலை கனவரல்ல பகுதியை சேர்ந்த பூசாரி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
