சிறுவர்களை விற்கும் மேலும் 4 இணையத்தளங்கள் அடையாளம் – விசாரணை தீவிரம்

பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக ‘ஒன்லைன்’ மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பிலும், இவற்றின் பின்புலம் தொடர்பிலும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

15 வயது சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவமானது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் முக்கிய நபர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளமை கைதுகள்மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் தொடர்கின்றன.

இதன் அடிப்படையிலேயே மேலும் நான்கு இணையத்தளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதேவேளை, 15 வயது சிறுமி விவகாரம் தொடர்பில் இதுவரை மாலைதீவு பிரஜையொருவர் உட்பட 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles