சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தை சேர்ந்த   உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் குறித்த நபர்   சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டமையால் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி அவரை சோதனையிட முயன்றுள்ளார்.

எனினும் அவர் தன்னை சோதனையிட அனுமதிக்காததால் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு அதன்பின் அவரை சோதனையிட்ட போது 800 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles