சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 23 ஆம் திகதி – பிரதமர் பங்கேற்பு

நுவரெலியா, சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் அறங்காவலர் சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

சீதையம்மன் ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பல் 11 மணிக்கு இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

இந்திய டெல்லி ரொட்டரிக் கழக டெல்லி சிட்டி கழகத்தினரின் அனுசரணையுடன் இந்திய நாட்டைச் சேர்ந்த திருமதி அனுஸ்ரீ ஜெயின் குப்தா குடும்பத்தவர்களின் ஞாபகார்த்தமாக இந்த தியான மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஸ்ரீ சீதையம்மன் ஆலய வரலாற்றுச்சான்று முத்திரை வெளியீட்டு விழாவும் ஸ்ரீ சீதையம்மன் ஆலய தீர்த்தக்குளம் திறப்பு வைபவமும் நடைபெறும்.

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், விஷேட அதிதியாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக உதவி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி எஸ். ஆதிரா உட்பட ஆலய நிர்வாக சபையினரும் பொது மக்களும் கலந்துக்கொள்வார்கள். இவ் வைபவத்தில் அனைவரையும் கலத்துக்கொள்ளும் படி ஆலைய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles